மோடி வாழ்க்கை வரலாறு: சத்யராஜ் பதில்

"எந்தத் தகவலாக இருந்தாலும் அதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்".
சத்யராஜ்
சத்யராஜ்

மோடி வாழ்க்கை வரலாற்றை மணிவண்ணன் போன்ற திறமை கொண்டவர்கள் இயக்கினால் நடிப்பேன் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் போன்ற பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சத்யராஜ், ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் தானும் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கூலி, சிக்கந்தர், மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஆகியவற்றில் நடிக்கிறீர்களா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சத்யராஜ், “எந்தத் தகவலாக இருந்தாலும் அதனை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பார்கள். கூலி படத்தில் நான் நடிக்கிறேன். மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. ஒருவேளை அதில் நடிப்பதாக இருந்தால் மணிவண்ணன் போன்ற திறமை கொண்டவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும். உள்ளதை உள்ளபடியே மணிவண்ணன் எடுப்பார். பா. இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இப்படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in