.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னை சாலிகிராமம் பகுதியில் நடைபெற்ற சர்தார்- 2 படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் கடந்த 2022-ல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில் நேற்று சண்டைக் கலைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.