நடிகை சம்யுக்தா விவாகரத்துப் பெற்றுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சம்யுக்தா சண்முகநாதன் 2007 மிஸ் சென்னை பட்டத்தை வென்று வெளிச்சத்துக்கு வந்தார். பிறகு, பிரபல மெகா தொடரான சந்திரகுமாரியில் சம்யுக்தா நடித்தார். மாட்லிங் மற்றும் நடிப்பில் பிரபலமடைந்தார் சம்யுக்தா. 2020-ல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.
இவர் கார்த்திக் ஷங்கர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ரயான் என்ற மகன் உண்டு. இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை.
இந்நிலையில், தான் அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டதாக சம்யுக்தா இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விவாகரத்து தொடர்புடையப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக சம்யுக்தா குறிப்பிட்டுள்ளார். முன்னெப்போதும் இருப்பதைவிட வலிமையாக இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.