
நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தன்னைப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவும், சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து 2021-ல் பிரிந்தார்கள்.
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார் சமந்தா.
இந்நிலையில் சமீபத்தில் கலாட்டா இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார்.
சமந்தா பேசியதாவது:
“துரதிர்ஷ்டவசமாக, ஆணாதிக்க இயல்புடைய ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். எனவே எந்த நேரத்தில் என்ன தவறு நடந்தாலும் ஒரு பெண் குற்றம்சாட்டப்படுகிறார். என்னைப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.
நீங்கள் நிறைய நிலையற்ற நபர்களுடன் பழகுவீர்கள், அவர்கள் உங்கள் மீது அதிக அன்பை செலுத்துவார்கள். சில நாள்களுக்குப் பிறகு உங்களை வெறுப்பார்கள். என் வாழ்நாள் முழுவதும், நான் நேசிக்கப்படவும், அங்கீகரிக்கப்படவும், பாராட்டப்படவும் விரும்புகிறேன். எனவே என்னை யார் நம்பினாலும், எதை நம்பினாலும் அது அவரவரின் விருப்பம்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.