மருத்துவ சிகிச்சை குறித்த சர்ச்சை பதிவு: சமந்தா விளக்கம்

“பிரபலமான ஒருவர் என்பதால் மட்டுமே இந்த கருத்துகளை பகிரவில்லை”.
சமந்தா
சமந்தா @Samantha
1 min read

என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவது மட்டுமே என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சமீபத்தில், ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவிட்ட ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இந்த பதிவுக்கு லிவர் டாக் என்கிற மருத்துவர் ஒருவர் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு நடிகை சமந்தா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நான் பல மருந்துகளை எடுத்துள்ளேன்.

அந்த மருந்துகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை என்பது எனக்கு தெரியும். எனவே இதையெல்லாம் என்னால் பெற முடிகிறது என்று நினைக்கும்போது நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

என்னைபோல் பலரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு என் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விஷயங்களைத் தான் நான் கூறியிருந்தேன்.

ஹைட்ரஜன் பெராக்சைடு குறித்து எனக்கு பரிந்துரைத்த மருத்துவரும் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர் தான்.

“நான் தவறாக பரிந்துரைக்கிறேன். நான் சிறைக்குச் செல்ல வேண்டும்” என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் கருத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.

என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். அவர்களுக்கு இடையே விவாதம் நடப்பதைக் காண சுவாரசியமாக இருக்கும். அதிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வேன்.

பிரபலமான ஒருவர் என்பதால் மட்டுமே இந்த கருத்துகளை பகிரவில்லை, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவது மட்டும் தான்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in