எனது வளர்ச்சிக்கு ஆன்மிகம் பக்கபலமாக உள்ளது: சமந்தா

“வாழ்க்கையில் சில விஷயங்களை நான் கடந்து சென்றிருக்க வேண்டுமா? என்று யோசிக்கிறேன்”.
சமந்தா
சமந்தா@elle
1 min read

கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்ததாக நடிகை சமந்தா பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் பல வெற்றி படங்களில் நடித்த சமந்தா கடைசியாக 2023-ல் குஷி படத்தில் நடித்தார்.

2017-ல் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா 2021-ல், அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் எல்லே இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “நம்முடைய வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம், மேலும் சில விஷயங்களை நான் கடந்து சென்றிருக்க வேண்டுமா? என்று சில நேரங்களில் யோசித்து பார்க்கிறேன்.

கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், வாழ்க்கை உங்கள் மீது எதை வீசினாலும் அதனை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.

இதற்கான தையிரியமும் பலமும் ஆன்மிகத்திலிருந்து வருகிறது என்று நினைக்கிறேன். எனது வளர்ச்சிக்கு ஆன்மிகம் மிகவும் பலமாக இருக்கிறது. அனைத்து தடைகளையும் கடந்து வருவதற்கு இது மிகவும் உதவியாக உள்ளது.

இந்த உலகத்தில் அதிகமான வலிகள் உள்ளது. அதனை சரிசெய்ய ஆன்மிகமே சிறந்த வழி. அது உங்களுடைய சிறந்த நண்பனாக இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in