சலார்: ஓடிடி-யில் நாளை (ஜன. 20) வெளியாகிறது

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.
சலார்
சலார்@PrabhasRaju
1 min read

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் போன்ற பலர் நடித்த ‘சலார்’ படம் கடந்த 22-ல் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் நாளை (ஜன. 20) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘சலார்’. பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ‘சலார்’ படம் நாளை (ஜன. 20) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in