
பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் - நவ்நீத் திருமணம் கோவாவில் நேற்று நடைபெற்றது.
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் நிறைய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காலா, கோட் உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
இன்ஸ்டகிராமில் தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வது சாக்ஷி அகர்வாலின் வழக்கம்.
சாக்ஷி அகர்வாலின் திருமணம் கோவாவில் நெருங்கியவர்கள் மத்தியில் ஜனவரி 2 அன்று நடைபெற்றது. சாக்ஷி அகர்வால் மற்றும் நவ்நீத் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள். தற்போது இருவரும் வாழ்க்கைத் துணையாகக் கரம்பிடித்துள்ளார்கள்.
இவருடையத் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.