பாலியல் புகார் எதிரொலியாக நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை 5 நாட்களுக்கு கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் காவல் துறையினர் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பிறகு பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீதும், நடிகர் ஜெயசூர்யா மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் நடிகர் முகேஷை அடுத்த 5 நாட்களுக்கு கைது செய்யக் கூடாது என்று எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே முகேஷ் எம்எல்ஏ பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி முகேஷின் வீட்டுக்கு முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.