ரீல்ஸில் சக்கை போடும் ‘கண்மணி அன்போடு’ பாடல் நடனங்கள்!

நடிகை ஹன்சிகாவும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ரீல்ஸில் சக்கை போடும் ‘கண்மணி அன்போடு’ பாடல் நடனங்கள்!
ரீல்ஸில் சக்கை போடும் ‘கண்மணி அன்போடு’ பாடல் நடனங்கள்!@ihansika

‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு பலரும் ஆடிய நடனங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வேகமாகப் பரவி வருகிறது.

1991-ல் வெளியான குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு பலரும் நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் ‘கண்மணி அன்போடு’ பாடல் இடம்பெற்ற காட்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பிறகு அந்த பாடல் இன்னுமும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாவே அந்த பாடலுக்கு நடனம் ஆடக்கூடிய காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த டிரெண்டை பலரும் பின்பற்றி வரும் நிலையில் நடிகை ஹன்சிகாவும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in