ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸின் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் அண்மையில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவினார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ரவி மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்றவர்களின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு "ப்ரோ கோட்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
ரவி மோகன் தற்போது கராத்தே பாபு, சுதா கொங்கராவின் பராசக்தி, ஜெனி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எஸ்ஜே சூர்யாவுக்கு லவ் இன்சூரன்ஸ் கம்பனி, சர்தார் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளன.