2026-ல் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்?: தகவல் | Vijay Deverakonda | Rashmika Mandanna |

உதய்பூரில் பாரம்பரிய இடம் ஒன்றில் திருமணம் நடைபெறவுள்ளதாக...
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா (கோப்புப்படம்)
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா (கோப்புப்படம்)
1 min read

பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரியில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர திரையுலகில் பிரபலமான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் 2018-ல் வெளியான கீதா கோவிந்தம், 2019-ல் வெளியான டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நெருக்கம்

இருவரும் நீண்ட காலமாக நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தங்கள் நெருக்கம் குறித்த வதந்திகளை ராஷ்மிகா மந்தனாவோ விஜய் தேவரகொண்டாவோ மறுக்கவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

ரகசிய நிச்சயதார்த்தம்

இதற்கிடையில் கடந்த அக்டோபர் 3 அன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தெரிகிறது. திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கெடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பான படங்கள் ஏதும் வெளியாகவில்லை. மேலும், இரு தரப்பும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

திருமணம் எப்போது?

இந்நிலையில், அவர்களது திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு தரப்பினருக்கும் நெருக்கமான ஒருவர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாவுக்கு பிப்ராரி 26 அன்று உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாகவும். அதற்காக பாரம்பரிய இடம் ஒன்றைத் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நிச்சயதார்த்த நிகழ்வைப் போலவே திருமணத்திலும் இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Actors Vijay Deverakonda and Rashmika Mandanna will be Mr and Mrs sooner than you think. After a secret engagement in October in the presence of their families, the couple is ready to take things to the next step in 2026. A source close to the actors confirms details of their wedding date and venue to Hindustan Times.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in