ராப் இசைக் கலைஞர் அறிவு நீண்ட நாள் காதலி கல்பனாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.
சமூக நீதி சிந்தனைகளைக் கொண்ட புரட்சிகரமானப் பாடல்களை எழுதி, பாடி பிரபலமடைந்தார் அறிவு. காலா திரைப்படத்தின் மூலம் திரைத் துறையிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
கல்பனாவும் சமூகச் செயற்பாட்டாளராக அறியப்படுகிறார். இவரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல்களைக் கொடுத்து வருகிறார். அறிவு கடந்தாண்டு வெளியிட்ட வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தில் 'தொடாத' என்ற பாடல் காட்சிகளை இயக்கியதும் கல்பனாதான்.
இவர்களுடையத் திருமணம் சென்னையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவு திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.