கான் பட விழாவில் 2-வது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்ற ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கான் சர்வதேசப் பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15 முதல் 25 வரை நடைபெற்றது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ (all we imagine as light) என்கிற மலையாள - ஹிந்தி படம் போட்டியிட்டது.
இப்படத்துக்கு கான் விழாவில் 2-வது உயரிய விருதாக கருதப்படும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்கிற சாதனையைப் படைத்தார் பாயல் கபாடியா.
மேலும் இப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கான் விழாவில் பிரதான பிரிவில் போட்டியிட்டு விருது வென்ற முதல் படம் எனும் சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இப்படம் நவம்பர் 22 அன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் ராணா பெற்றுள்ளார்.