நடிகை ரம்யா பாண்டியனுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.
‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன் பிறகு ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
ரம்யா பாண்டியனும் பஞ்சாப்பைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான லோவல் தவனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களது திருமணம் ரிஷிகேஷ், சிவபுரி கங்கை கரையில் இன்று நடைபெற்றுள்ளது.
இதில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.