
2018-ல் வெளிவந்த ராட்சசன் படத்தைத் தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்குகிறார் ராட்சசன் இயக்குநர் ராம்குமார்.
விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்கள் வெளியான நிலையில் இருவரும் மூன்றாவதாக இணைந்துள்ள படத்துக்கு இரண்டாவது வானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தயாரிப்பு - சத்யஜோதி ஃபிலிம்ஸ். இசை - திபு நினன் தாமஸ்.