ஓடிடியில் வெளியாகிறது கூலி: தேதி அறிவிப்பு!| Coolie | OTT Release |

அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் கூலி படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு...
ஓடிடியில் வெளியாகிறது கூலி: தேதி அறிவிப்பு!| Coolie | OTT Release |
படம் : https://x.com/sunpictures
1 min read

ரஜினி - லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள கூலி படம் செப்டம்பர் 11-்ல் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில், ஷ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், சௌபின் சாஹீர், உபேந்திரா போன்றோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், கடந்த ஆகஸ்ட் 14-ல் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், செப்டம்பர் 11-ல் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் கூலி படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Coolie | Rajinikanth | Lokesh Kanagaraj | Sun Pictures | Amazon Prime | OTT Release | Coolie OTT Release | Amazon Prime Releases | Soubin Shahir | Sathyaraj | Aamirkhan | Nagarjuna | Shruthi haasan

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in