முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நன்றி: ரஜினிகாந்த் | Rajinikanth

திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்.
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நன்றி: ரஜினிகாந்த் | Rajinikanth
1 min read

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

1975-ல் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் திரைத் துறையில் புகழின் உச்சத்தில் உள்ளார். அபூர்வ ராகங்கள் 1975 ஆகஸ்டில் வெளியானது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆகஸ்டில் தற்போது கூலி வெளியாகியுள்ளது. இதன்மூலம், திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் ரஜினிகாந்த்.

இதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூறினார்கள். வாழ்த்து கூறிய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

"அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

எனது 50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், பிரேமலதா மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்துத் திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்குத் திரைத் துறையினர் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தார்.

Rajinikanth | Rajini 50 Years | Premallatha Vijayakant | DMDK | Tamil Film Industry | Tamil Film | MK Stalin | Udhayanidhi Stalin |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in