இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவின் முதல் படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவுக்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா ஆகிய நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூரிய வம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன்.
இவரது மகன் விஜய் கனிஷ்கா நடித்த முதல் படமான ‘ஹிட் லிஸ்ட்’ விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த் உட்பட பலரும் நடித்தனர்.
இந்நிலையில் விக்ரமன், விஜய் கனிஷ்கா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் ரஜினி, கமல், விஜய், சூர்யா ஆகியோரைச் சந்தித்தனர். அனைவரும் படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பான காணொளியை கே.எஸ்.ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.