
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான் என ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் 2025 மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையுடன் நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
மேலும் சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் வழக்கம்போல் கூடியிருந்தார்கள். ரசிகர்களுக்காக வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், எல்லோரையும் நோக்கி கைகளை அசைத்தபடி அன்பைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.