இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்: ரஜினியின் கருத்து என்ன?

"இது இளையராஜா மற்றும் தயாரிப்பாளர் இடையிலான பிரச்னை."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

கூலி பட டைட்டில் டீசர் இசை குறித்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருப்பது, அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான விவகாரம் என ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22-ல் வெளியானது. 1983-ல் ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையில் உருவான 'வா வா பக்கம் வா' பாடல், அனிருத்தால் மாற்றியமைக்கப்பட்டு கூலி படத்தின் இந்த டீசரில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதைப் பயன்படுத்த முன் அனுமதி பெறவில்லை என கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்தப் பிரச்னை குறித்து விமான நிலையத்தில் ரஜினியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இது இளையராஜா மற்றும் தயாரிப்பாளர் இடையிலான பிரச்னை என்று கூறி அவர் நகர்ந்துவிட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in