அரசியல் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் ரஜினி தெரிவித்துள்ளார்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செப். 20) மாலை நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது என்றும் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து தனக்கு சரியாக தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி, “அரசியல் குறித்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.