மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் விஜயகாந்த்: ரஜினி

"விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை".
ரஜினி
ரஜினிANI

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கலைத் துறைக்காக பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ல் அறிவித்தது. மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கலைத் துறைக்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் விஜயகாந்த் இல்லை என்பதை தன்னால் தற்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினி பேசியுள்ளார்.

ரஜினி பேசியதாவது: “எனது அருமை நண்பர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனி அவரை போல் ஒருவரை பார்க்கவே முடியாது. மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் விஜயகாந்த்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in