ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
மேலும், வேட்டையன், கூலி ஆகிய படங்களின் வேலைகள் நன்றாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும், சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், “மூத்தவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அக்டோபர் 10 அன்று வேட்டையன் படம் வெளியாவதே சரியாக இருக்கும்” என்று சூர்யா சொன்னதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யாவின் அன்புக்கும், பாசத்துக்கும் நன்றி என்றார்.