ரஜினி - லோகேஷ் படத்தின் பெயர் 'கூலி'!

ரஜினி - லோகேஷ் படத்தின் பெயர் 'கூலி'!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியின் 171-வது படத்துக்குக் கூலி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் லோகேஷ் இணைந்ததிலிருந்து படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று மாலை படத் தலைப்பை வெளியிடுவதற்கான டீசர் வெளியானது. படத்துக்குக் கூலி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1995-ல் சரத்குமார் நடிப்பில் கூலி என்ற பெயரில் ஏற்கெனவே தமிழ்ப் படம் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்துக்கும் கூலி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

1979-ல் கமல், ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்றிருந்த சம்போ சிவ சம்போ பாடலில் வரும் வரிகளை ரஜினி, 1982-ல் வெளியான ரங்கா படத்தில் வசனமாகப் பேசியிருப்பார். இதே வசனம் இந்த டீசர் காட்சியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in