ரசிகர்கள் சந்திப்பா?: ரஜினி தரப்பு மறுப்பு

"தலைவரின் அனுமதி இல்லாமல் இது போன்ற செய்தியை பகிர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”.
ரஜினி
ரஜினி@riazkahmed.pro

ராகவேந்திரா கோடம்பாக்கம் மண்டபத்தில் ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளார் என்று வாட்ஸப்பில் பகிரப்பட்ட செய்திக்கு ரஜினி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக ரசிகர் ஒருவர் பகிர்ந்த செய்தி, முற்றிலும் பொய்யானது என ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார் என்று சமூக ஊடகங்களில் செஞ்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரசிகர்கள் உள்ள வாட்ஸப் தளத்தில் நேற்று பகிர்ந்து உள்ளார், இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். பகிர்வதற்கு முன், தகவலின் நம்பகத்தன்மையை தயவுசெய்து சரி பார்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தலைவரின் அனுமதி இல்லாமல் இது போன்ற செய்தியை பகிர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in