
ரஜினியிடம் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜூலை 12 அன்று திருமணம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ரஜினி திருமணம் முடிவடைந்த நிலையில் விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அம்பானி திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, “அம்பானி வீட்டு கடைசி திருமணத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. மிக பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினார்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து இந்தியன் - 2 குறித்து மற்றொரு செய்தியாளர் கேட்க, “இன்னும் படத்தை பார்க்கவில்லை. நாளை பார்க்க போகிறேன்” என்று தெரிவித்தார். இதன் பிறகு அவரிடம் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.