ரஜினியுடன் போட்டியில்லை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம்

“வேட்டையன் படத்தை தீபாவளி அன்று வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது”.
ஞானவேல் ராஜா
ஞானவேல் ராஜா

வேட்டையன் படத்தை தீபாவளி அன்று வெளியிட பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ளார்.

‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.

இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடிக்கின்றனர். இசை - அனிருத்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், இப்படம் அக்டோபர் 10-ல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தது.

இதைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதன் பிறகு இரு பெரியப் படங்களும் ஒரே நாளில் வரப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “வேட்டையன் படத்தை தீபாவளி அன்று வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. அதனால் தான் கங்குவா படத்தை அக்டோபர் 10 அன்று ரிலீஸ் செய்கிறோம். மற்றபடி ரஜினியுடன் போட்டி போடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. நானே மிகப்பெரிய ரஜினி ரசிகன். என்னுடைய பிறந்தநாளுக்கு கூட கோயிலுக்கு செல்லமாட்டேன். ஆனால், ரஜினியின் பிறந்தநாள் என்றால் தவறாமல் கோயிலுக்கு சென்று 108 முறை கோயிலைச் சுற்றி வருவேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in