பிரதமர் மோடி மீண்டும் ஜெயிப்பாரா?: ரஜினி பதில்

”ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வேன். அங்கு கேதர்நாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறேன்”.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே ஆன்மீகம் தேவை என நடிகர் ரஜினி பேசியுள்ளார்.

நடிகர் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டார் ரஜினி. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வேன். அங்கு கேதர்நாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் பிரதமர் மோடி மீண்டும் ஜெயிப்பாரா? என்று கேட்கப்பட்டது, அதற்கு ரஜினி, “அரசியல் கேள்விகள் வேண்டாம்” என்றார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் இசையா? கவிதையா? என்ற பிரச்னை போய் கொண்டிருக்கிறதே? என்று கேட்டதற்கு, “அண்ணா.. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, “இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே ஆன்மீகம் தேவை. ஆன்மீகம் என்றால் சாந்தியும் சமாதானமும்தான்” எனக் கூறினார். முடிவாக, புதிய இந்தியா பிறக்குமா? என்ற கேள்விக்கு, “கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in