லோகேஷ் கனகராஜ் கதை, தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’

‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் கதை, தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’
லோகேஷ் கனகராஜ் கதை, தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’@Dir_Lokesh
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமாக ‘ஃபைட் கிளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். இதைத் தொடர்ந்து தனது 2-வது படத்தை தயாரிக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இப்படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

இயக்குநராக இருந்து சமீபத்தில் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் மூலம் நடிகராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது தனது 2-வது படத்தை தயாரித்து வருகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in