தனது சொந்த வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்: வீடியோ வெளியிட்டு அறிவிப்பு | Raghava Lawrence |

’காஞ்சனா 4’ படத்திற்காக வாங்கிய முன்பணத்தில் கல்விச் சேவையைச் செய்வதாகவும் தகவல்...
தனது சொந்த வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்: வீடியோ வெளியிட்டு அறிவிப்பு | Raghava Lawrence |
https://x.com/offl_Lawrence
1 min read

தான் வாங்கிய முதல் சொந்த வீட்டை குழந்தைகளுக்காக இலவசப் பள்ளியாக மாற்ற உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் மூலம் புகழைப் பெற்றவர். மேலும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நல உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு பல சேவைகளை ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார். அண்மையில் ராகவேந்திரா புரடக்‌ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேகி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதில், பேய் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

”காஞ்சனா 4 படப்பிடிப்பு வேலைகள் பாதி அளவில் இருக்கின்றன. படங்களுக்காக நான் வாங்கும் முன்பணத்தைக் கொண்டு சமூகப் பணி செய்வது வழக்கம். தற்போது காஞ்சனா 4 படத்திற்காக வாங்கிய முன்பணத்தைக் கொண்டு கல்விக்கு உதவி செய்யும் நோக்கத்தில் நான் முதலில் வாங்கிய சொந்த வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் குழு நடனக் கலைஞராக இருந்தபோது சிறுகச் சிறுக சேர்த்த பணத்தில் என் தாய் வாங்கிய வீடு இது. பிறகு அந்த வீடு ஆதரவற்றோர் தங்கிப் படிக்கும் இடமாக மாற்றப்பட்டது. அங்கு வளர்ந்து, தற்போது ஆசிரியராக உள்ளவரையே இந்தப் பள்ளிக்கு முதல் ஆசிரியராக நியமிக்கிறேன். இந்தப் புதிய தொடக்கத்துக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன். எப்போதும் போல் எனக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். சேவையே கடவுள்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Raghava Lawrence | Kanchana 4 | Service is god |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in