தனுஷின் ‘ராயன்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

முன்னதாக, இப்படம் ஜூன் 13-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
‘ராயன்’
‘ராயன்’@dhanushkraja

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படம் ஜூலை 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 50-வது படமான ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உட்பட பலரும் நடித்துள்ளனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் ‘அடங்காத அசுரன்’ என்ற பாடலை தனுஷ் எழுதி, பாடியும் உள்ளார். ரஹ்மானும் இப்பாடலில் இணைந்து பாடியுள்ளார். முன்னதாக, இப்படம் ஜூன் 13-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் ஜூலை 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017-ல் வெளியான ‘பவர் பாண்டி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் இயக்கிய 2-வது படமான ‘ராயன்’ வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் 3-வது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படம் உருவாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in