‘ராயன்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இப்படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ இன்று வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ ஜூன் 13-ல் வெளியீடு!
தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ ஜூன் 13-ல் வெளியீடு!@sunpictures

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படம் ஜூன் 13-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 50-வது படமான ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உட்பட பலரும் நடித்துள்ளனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இப்படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ இன்று வெளியாகி உள்ளது. இப்பாடலை தனுஷ் எழுதி, பாடியும் உள்ளார். ரஹ்மானும் இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் ஜூன் 13-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தனுஷ், தெலுங்கில் குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இயக்குநர் மாரி செல்வராஜுடன் ஒரு படம், இளையராஜாவின் வாழ்க்கை படம் என அடுத்தடுத்து பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in