
அல்லு அர்ஜுன் நடித்துவரும் ‘புஷ்பா 2’ படம் டிசம்பர் 6 அன்று வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உட்பட பலரும் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் புஷ்பா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் வேலைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ படம் டிசம்பர் 6 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.