
புஷ்பா 2 படம், உலகெங்கும் ரூ. 1,500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5 அன்று வெளியானது. புஷ்பா 1 மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், புஷ்பா 2 மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
படம் வெளியீட்டுக்கு முன்பே ஏறத்தாழ ரூ. 100 கோடி வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. படம் வெளியான பிறகும், வெளியான நாள் முதல் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்தப் படம் 14 நாள்களில் உலகெங்கும் ரூ. 1,508 கோடி வசூலித்து இந்த இலக்கை வேகமாக எட்டிய முதல் இந்தியப் படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது.
மேலும் புஷ்பா 2-வின் ஹிந்திப் பதிப்பு, வரிகள் நீங்கலாக ரூ. 632.50 கோடி வசூலித்து இந்தியாவில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற மற்றொரு மகத்தான சாதனையையும் படைத்துள்ளது. சமீபத்தில் ரூ. 625 கோடி வசூலித்த ஸ்த்ரீ 2 படத்தின் வசூலை புஷ்பா 2 முறியடித்துள்ளது. இதனால் இந்தியாவில் எந்தப் படமும் தொடாத ரூ. 700 கோடி வசூல் என்கிற மாபெரும் இலக்கையும் புஷ்பா 2 விரைவில் அடையும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.