
‘புஷ்பா 2’ முதல் 4 நாளில் வரிகள் நீங்காமல் ரூ. 829 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் போன்ற பலர் நடித்த புஷ்பா 2 படம் கடந்த டிச. 5 அன்று வெளியானது. இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
முதல் 4 நாளில் ‘புஷ்பா 2’ வரிகள் நீங்காமல் ரூ. 829 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேகமாக ரூ. 800 கோடி வசூல் செய்த இந்தியப் படம் எனும் சாதனையைப் படைத்துள்ளது ‘புஷ்பா 2’.