‘கொட்டுக்காளி’ படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்த ‘கொட்டுக்காளி’ படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியானது.
ஏற்கெனவே, இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் இப்படம் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு கிராண்ட் பிரிக்ஸ் விருதினைப் பெற்றுள்ளது.
இந்த விருதை வென்ற பிறகு மேடையில் பேசிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ், “நான் என் தாய்மொழியில் பேச விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த விருது முக்கியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை எனது படக்குழுவினர் மற்றும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.