தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், கள்வன், மிரள் போன்ற படங்களைத் தயாரித்தார்.
டில்லி பாபு
டில்லி பாபு@AxessFilm
1 min read

ராட்சசன், ஓ மை கடவுளே உட்பட பல முக்கியமான தமிழ்ப் படங்களின் தயாரிப்பாளரான டில்லி பாபு இன்று காலமாகியுள்ளார்.

ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஜி. டில்லி பாபு. 2015-ல் வெளியான ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், கள்வன், மிரள் போன்ற பல முக்கியமான படங்களைத் தயாரித்தார்.ராட்சசன் படம் அவருக்குப் பெரிய பேரைப் பெற்றுத் தந்தது. தனது மகன் தேவ் கதாநாயகனாக நடிப்பில் வளையம் என்றொரு படத்தை அவர் தயாரித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டில்லி பாபு இன்று அதிகாலை காலமானார்.

இளம் இயக்குநர்கள் பலருக்கும் வாய்ப்புகளை அளித்து வந்த டில்லி பாபுவின் திடீர் மரணம் கோலிவுட்டுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in