மேடை சரிந்து விழுந்ததில் லேசான காயங்களுடன் தப்பியதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் திடீரென மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பிரியங்கா மோகன் உள்பட மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர்.
இந்நிலையில் தான் நலமாக இருப்பதாக நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா மோகனின் எக்ஸ் பதிவு
“இன்று தோரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன். இச்சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இத்தருணத்தில் என் மீது அக்கறை காண்பித்த அனைவருக்கும் நன்றி”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.