எனக்கு நானே போட்டி: மணிமேகலை சர்ச்சைக்கு சூசகமாகப் பதிலளித்த பிரியங்கா!

நான் சிக்கனோ, பலியாடோ, சிறிய மீனோ அல்ல.
பிரியங்கா
பிரியங்கா@priyankapdeshpande
1 min read

கிச்சன் சூப்பர் ஸ்டாரில் தன்னால் செய்யமுடியாததை, குக் வித் கோமாளியில் செய்துள்ளதாக தொகுப்பாளினி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த பிரியங்கா தேஷ்பாண்டே தனது வெற்றி குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா தெரிவித்துள்ளதாவது

“என்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக உணர வைப்பதில் பெருமை அடைகிறேன். அன்று சிக்கனை சரியாக சமைக்கத் தெரியாததால் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் தோல்வி அடைந்தேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘குக் வித் கோமாளி’ கோப்பையை எனது கையில் வைத்திருக்கிறேன்.

தற்போது என்னால் பறப்பது, நடப்பது, நீந்துவது என அனைத்தையும் சமைக்க முடியும் என்பதை தைரியமாக சொல்வேன். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு எப்போதும் நான் மட்டுமே போட்டி.

கிச்சன் சூப்பர் ஸ்டாரில் என்னால் எதை செய்யமுடியவில்லையோ, அதை இப்போது குக் வித் கோமாளியில் செய்துள்ளேன். நான் சிக்கனோ, பலியாடோ, சிறிய மீனோ அல்ல. என்னை நோக்கி நீங்கள் சிக்கனை வீசினால் ஒரு நிமிடத்தில் அதனை சமைத்துக் காட்டுவேன். என்னால் சிறந்த ஆட்டுக்கால் பாயாவைச் சமைக்க முடியும். ஒருவேளை நான் கடலில் இருந்தால், மற்ற மீன்களுடன் நிம்மதியாக வாழ்வேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிமேகலை அந்த நிகழ்ச்சியிலிருந்து இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து மணிமேகலை விலக பிரியங்கா தான் காரணம் என பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரியங்கா இந்த இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் மணிமேகலை சர்ச்சைக்கு சூசகமாகப் பதிலளித்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in