மெய்யழகனை மலையாளத்தில் எடுத்திருக்க வேண்டும்: இயக்குநர் பிரேம்குமார் வேதனை

யூடியூப் விமர்சகர்களில் 5 பேர் தான் சினிமா மீது உண்மையான ஆர்வத்தில் உள்ளார்கள்.
மெய்யழகனை மலையாளத்தில் எடுத்திருக்க வேண்டும்: இயக்குநர் பிரேம்குமார் வேதனை
1 min read

மெய்யழகன் படத்தைத் தமிழில் எடுத்ததற்குப் பதிலாக மலையாளத்தில் எடுத்திருக்க வேண்டும் என்று இயக்குநர் சி. பிரேம்குமார் கூறியுள்ளார்.

கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதையொட்டி கலாட்டா பிளஸ் - பரத்வாஜ் ரங்கனுக்கு சி. பிரேம்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

யூடியூப் விமர்சகர்களில் 5 பேர் தான் சினிமா மீது உண்மையான ஆர்வத்தில் உள்ளார்கள். மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்பார்கள் என்று சிலர் சொன்னார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. என் கதையை என் மொழியில் எடுக்கக்கூடாதா என்ன? ஆனால் அது உண்மை தான். திருட்டு டிவிடியை விடவும் பெரிய ஆபத்தாக ஒரு படத்தை மோசமாக விமரிசிப்பவர்களைப் பார்க்கிறேன். படத்தை ஓடிடியில் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆனால் எதிர்மறை விமர்சனங்களால் மெய்யழகன் படம் திரையரங்கில் நினைத்தது போல ஓடவில்லை. இதனால் என்ன பிரச்னை என்றால், ஓடிடியில் கிடைக்கும் வருமானத்துக்குச் சமமாகத்தான் எனக்கு அடுத்தப் படத்துக்கான பட்ஜெட் கிடைக்கும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in