‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்கிற பெரிய ஆசை தனக்கு இருப்பதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி உட்பட பலரும் நடிக்கும் படம் ‘மெய்யழகன்’. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பிரேம்குமாரிடம் ‘96’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்கிற பெரிய ஆசை இருக்கிறது. படத்தின் கதையை ஏறத்தாழ எழுதிவிட்டேன். இக்கதையை எழுதக்கூடாது என்ற முடிவில் இருந்தேன், ஆனால் எழுதி முடித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியின் மனைவியிடம் கதையைச் சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. முழுமையாக கதையை எழுதியவுடன் விஜய் சேதுபதியை சந்தித்து கதையை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான். இப்படத்தை இயக்குவது குறித்து நான் மட்டும் முடிவு செய்ய முடியாது, அதற்கு விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் கால் ஷீட் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.