பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் அறிவிப்பு | Vikram

அடுத்த இரு ஆண்டுகளில் 10 படங்களைத் தயாரிக்கவுள்ளதாக, அதன் இயக்குநர்களை அண்மையில் அறிமுகம் செய்தது வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்.
பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் அறிவிப்பு | Vikram
படம்: https://x.com/VelsFilmIntl
1 min read

96, மெய்யழகன் புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் கடந்த ஜூன் 27 அன்று அடுத்த இரு ஆண்டுகளில் தயாரிக்கவுள்ள 10 படங்களின் இயக்குநர்களைப் பட்டியலிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் சுந்தர் சி, கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, கணேஷ் கே பாபு, செல்லா அய்யாவு, ஜூட் ஆந்தணி ஜோசஃப் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். தனுஷின் 54-வது படமாக உருவாகும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. படப் பூஜை காணொளியை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் 4 நாள்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்நிலையில், பிரேம் குமார் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம், பிரேம் குமார், ஐசரி கணேஷ், குஷ்மிதா கணேஷ் ஆகியோர் இருந்தார்கள்.

96, மெய்யழகன் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரமுடன் கைக்கோர்த்திருக்கிறார் பிரேம் குமார். வீர தீர சூரன்: பாகம் 2 வெற்றிக்குப் பிறகு மண்டேலா மற்றும் மாவீரன் படங்களை இயக்கிய மடோன் அஸ்வினுடன் இணைந்து விக்ரம் பணியாற்றுக்கிறார். இது விக்ரமின் 63-வது படம். இவருடைய 64-வது படமாக பிரேம் குமார், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கூட்டணியில் உருவாகும் படம் அமைகிறது.

Vels Film International | Vikram | Prem Kumar | Ishari Ganesh | Ishari K Ganesh

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in