
பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாள்களாக உருவாகி வரும் அந்தகன் படத்தின் டீசர் இன்று வெளியானது.
2018-ல் வெளியான அந்தாதுன் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள திரைப்படம்தான் அந்தகன். இந்தப் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தையும், பிரபல நடிகர் - இயக்குநரான தியாகராஜன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் சூரியா படத்தொகுப்பு செய்துள்ளார்.
பல வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்டில் வெளியாகும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டீசரிலும் உறுதியான வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. ஆகஸ்டில் வெளியாகும் என்று பொதுவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தாதுன் படம் ஏற்கெனவே மாஸ்ட்ரோ என்ற பெயரில் தெலுங்கிலும், பிராமம் என்ற பெயரில் மலையாளத்திலும் 2021-ல் வெளியாகின.