

தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய கதாநாயகர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் இணைவாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய முதல் 3 படங்களும் வசூலில் ரூ. 100 கோடியை அடைந்துள்ளன என்பதுதான் இன்றைய நிலவரம். மற்றதெல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும்.
ஆம். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து சமீபத்தில் வெளியான டியூட் படம் தனது 6-வது நாளில் ரூ. 100 கோடி வசூலை அடைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் லவ் டுடே, டிராகன், டியூட் என பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த 3 படங்களும் வசூலில் ரூ. 100 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளன. சமீபகாலத்தில் வேறெந்த நடிகருக்கும் இந்தப் பெருமை கிடைக்கவில்லை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஐகே படம் டிசம்பர் 18-ல் வெளியாகவுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வசூல் மீது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
The production company has officially announced that Dude, directed by Keerthiswaran and starring Pradeep Ranganathan, has crossed the ₹100 crore mark at the box office within just six days of its release.
All three films starring Pradeep Ranganathan — Love Today, Dragon, and Dude — have each grossed over ₹100 crore at the box office, setting a new record. In recent times, no other actor has achieved this feat.