அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’

ஏற்கெனவே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' படத்தில் நடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’
அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’@Ags_production

இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கியவர் அஸ்வத்.

பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் ஆகிய இருவரும் கல்லூரி நண்பர்கள். அவர்கள் படிக்கும் சமயத்திலிருந்தே இருவரும் சேர்ந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக படத்தின் அறிவிப்பு காணொளியில் பிரதீப் ரங்கநாதன் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் ஏற்கெனவே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி என பலரும் நடிக்கின்றனர். இசை- அனிருத்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in