27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் பிரபு தேவா - கஜோல்

1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் பிரபு தேவாவும், கஜோலும் இணைந்து நடித்திருந்தனர்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் பிரபு தேவா - கஜோல்
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் பிரபு தேவா - கஜோல்
1 min read

27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரபு தேவாவும், கஜோலும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் பிரபு தேவாவும், கஜோலும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘மஹாராக்னி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநரான சரண்தேஜ் உப்பளபதி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் க்ளிம்ஸ் காணொளியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in