பிரபு மகளை மணமுடித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்
ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்@onlynikil
1 min read

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மூத்த நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

கடந்த 2015-ல் வெளியான படம் 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து, சிம்பு நடிப்பில் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, பிரபு தேவா நடிப்பில்  ‘பகீரா’ ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ’மார்க் ஆண்டனி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ரூ. 100 கோடி வசூலையும் குவித்தது.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, லெஜண்ட் சரவணன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in