
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரபல நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 400 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரபாஸ் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இத்தொகையை அவர் வழங்கியுள்ளார்.
இதற்கு முன்பு சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண், விக்ரம், சூர்யா, கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்ற பல திரைப் பிரபலங்களும் நிவாரண நிதியை அளித்துள்ளார்கள்.
இவர்களில் அதிகத் தொகையை வழங்கிய நடிகர்களில் ஒருவரான பிரபாஸுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.