மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022-ல் வெளியான பொன்னியின் செல்வன் - 1 படத்துக்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன்-1 கடந்த 2022-ல் வெளியானது. பொன்னியின் செல்வன்- 2 2023-ல் வெளியானது. இதில் பொன்னியின் செல்வன் -1 படத்துக்கு சிறந்த தமிழ்ப் படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என நான்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விருதைப் பெறுகிறார். சிறந்த ஒளிப்பதிவுக்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விருதைப் பெறுகிறார். சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி விருதைப் பெறுகிறார்.
தமிழுக்குக் கிடைத்த விருதுகள்
சிறந்த தமிழ்ப் படம்: பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒலி வடிவமைப்பு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு: ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை: நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடன இயக்கம்: ஜானி & சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்)